ஜ-எல தெற்கு நிவந்தம – வேவல்காரய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தொலைத்தொடர்பு தூண் ஒன்றுடன் மோதிக்கொண்டதனாலேயே நேற்று
இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கர்ப்பிணி ஒருவர் உள்ளிட்ட எட்டு பேரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment