அமுல் பேபிகளாக ஐஸ்வர்யா மற்றும் தீபிகா

அமுல் பேபிகளாக அறிமுகமாகியுள்ளார்கள் நடிகைகள் ஐஸ்வர்யா ராயும் தீபிகா படுகோனும்.

அமுல் வெண்ணெய், நெய் போன்ற பால் பொருள்களுக்கான புதிய விளம்பரத்தில் கான்ஸ் திரைப்பட விழாவை கௌரவிக்கும் வகையிலும் அத்திரைப்பட விழாவில் பங்கேற்ற நம் நாட்டு நடிகைகளை பாராட்டும் வகையிலும் புதிய கார்ட்டூன் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதாவது, கான்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராயும் தீபிகா படுகோனும்.
கவுன்களுடன் சீஸ்- பிரட் சாப்பிடுவது போல கார்டூன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கோரி தேரா காவ்ன் படா பியாரா என்ற பழைய ஜேசுதாசின் இந்திப் பாடல் வரிகளை லேசாக மாற்றி - தேரா கவுன் படா நியாரா என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

விளம்பரத்தைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ள தீபிகா படுகோன் தமது டுவிட்டர் பதிவில், இது கேக் மீது ஐஸ் வைத்தது போலவும் டோஸ்ட்டில் வெண்ணை தடவியது போலவும் இருப்பதாக ரசித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment