பதவி விலகும் முதல் அரசர்

ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ ( Akihito), நேற்றுடன்  ஓய்வு பெற்றிருந்தார். இருநூறு ஆண்டுகளில் பதவி விலகும் முதல் அரசர் இவர் ஆவார்.

85 வயதான பேரரசர் அகிஹிட்டோ, 1989 ஆம் ஜப்பானின் 125 ஆவது பேரரசராக அகிஹிட்டோ முடிசூடினார்.

முதுமை காரணமாக தன்னுடைய கடமைகளை சரிவர  மேற்கொள்ள முடியாது  என அஞ்சுவதால் பதவியிலிருந்து விலக விரும்புவதாக பேரரசர் அகிஹிட்டோ, 2016 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அவரது விருப்பப்படி,  தனது பதவியிலிருந்து விலகுவார் என ஜப்பானிய அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு அரசரின் மீது பரிவை உண்டாக்கி உள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 

ஜப்பானில் அரசருக்கு எந்த அரசியல் அதிகாரமும் இல்லை என்றாலும், தேசத்தின் அடையாளமாக அவர் இருப்பார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment