சாவகச்சேரியில் வாள்வெட்டு ; ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, பாலாவி தெற்கில் நேற்று நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

அதே இடத்தைச் சேர்ந்த தம்பிராஜா பொன்னுத்துரை (வயது–62) என்பவரே உயிரிழந்துள்ளார். 

இதேவேளை படுகாயமடைந்த, யே.திலிசாந் (வயது–25), சோ.கணேசமூர்த்தி (வயது –29), தம்பிராஜா யோகராஜா (வயது–46),த.கவிதரன் (வயது–38), ந.வளர்மதி (வயது –52), செ.குமார் (வயது –35), வை.தவசீலன் (வயது –39) ஆகியோர்  சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 30 பேர் அடங்கிய கும்பல் ஒன்று ஈட்டிகள், கூரிய ஆயுதங்களுடன் வந்து வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடந்தித் தப்பிச் சென்றதாகக் என்று கூறப்படுகின்றது.

உயிரிழந்தவரின் மார்பில் கூரிய ஆயுதம் ஒன்றால் பல தடவைகள் குத்தப்பட்டுள்ளது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

கடந்த இரு வாரகாலமாக இரு தரப்பினருக்கு இடையே முறுகல் நிலைமை இருந்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். மணல் அகழ்வு தொடர்பான பிணக்கே இந்த முறுகல் நிலமைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தப் பிரச்சினை காரணமாகக் கடந்த மாதமும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்றும் அப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

நேற்று முன்தினமும் அங்கு வந்த குழுவொன்று தாக்குதல் நடத்தித் தப்பிச் சென்றிருந்தது என்றும், நேற்று முப்பது பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திச் சென்றுள்ளது என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது இராணுவத்தினரும், பொலிஸாரும் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இத்தனைபேர் ஆபத்தான ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தி எவ்வாறு தப்பிச் சென்றனர் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment