கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (29) முதல் தடவையாக கூடுகின்றது.
இன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது.
இந்த தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை கண்டறிவதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தெரிவுக் குழு கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் நடவடிக்கை தொடர்பிலும், அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment