அமித் மிஸ்ரா வித்தியாசமான முறையில் அவுட்

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் அமித் மிஸ்ரா வித்தியாசமான முறையில் அவுட்டான வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய பிளே ஆப் சுற்றில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதரபாத் அணியும் மோதின,
அதன் படி முதலில் ஆடிய ஹைதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 162 ஓட்டங்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லி அணி கடைசி கட்டத்தில் போராடி 19.5 ஓவரில் 165 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியி அமித் மிஸ்ரா வித்தியாசமான முறையில் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.போட்டியின் கடைசி ஓவரில் மூன்று பந்துகளுக்கு 3 ஓட்டங்கள் என்று இருந்த போது, நான்காவது பந்தை எதிர் கொண்ட அமித் மிஸ்ரா, அதை அடிக்க முடியாமல் விட, கீப்பரான சகா பந்தை பிடித்து ரன் அவுட்டாக முயற்சி செய்தார்.
ஆனால் அப்போது பந்தானது ஸ்டம்பில் படாமல் பந்துவீச்சாளரான கலில் அகமது கையில் பந்து சிக்கியது.
உடனே அந்த பந்தை பிடித்த அவர் மிஸ்ராவை அவுட்டாக்கும் நோக்கில் ஸ்டம்பை நோக்கி பந்தை த்ரோ செய்தார்.
ஆனால் ரன் எடுக்க ஓடிய போது அமித் மிஸ்ரா, திடீரென திசையை மாற்றி ஸ்டெம்பை மறைக்கும் நோக்கில் ஓடினார். இதனால் பீல்டிங்கின் போது குறுக்கிட்டதற்க்காக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பலரும் மிஸ்ராவை கிண்டல் செய்து வருகின்றனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment