மேலும் ஒரு வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது!!

உலக கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களாக பயன் படுத்திக் கொள்ள மேலும் ஒரு வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

2019 ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் வரும் 30ம் திகதி முதல் ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இந்தியா அணியின் வீரர்கள் பட்டியல் கடந்த மாதம் 15ம் திகதி அறிவிக்கப்பட்டது. அணியில் கேப்டனாக கோலி மற்றும் ரோகித் சர்மா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் தவான், ராகுல், கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், பும்ரா, புவனேஷ்குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கேதர் ஜாதவ் காயம் ஏற்பட்டு விட்டதால் உலக கோப்பை தொடரில் அவர் குணம் அடையவில்லை என்றால் விரைவில் மாற்று வீரர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

உலக கோப்பை தொடரில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ள 3 வீரர்களை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருந்தது.

அவர்களுக்கு ரிசர்வ் வீரர்கள் என்று அழைப்பர். அந்த பட்டியலில் அம்பத்தி ராயுடு , ரிஷப் பன்ட் மற்றும் நவ்தீப் சனி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தற்போது அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளாரான இஷாந்த் சர்மாவை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இளம் வீரர்களுக்கு இஷாந்த் சர்மாவின் அனுபவம் பயன்படும், அது அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment