திரில் வெற்றி பெற்ற டெல்லி அணி!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான நாக்-அவுட் சுற்று போட்டியில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் நாக்-அவுட் சுற்று போட்டியானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை குவித்தது.


ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக மார்டின் குப்டில் 36(19) ரன்களும், மனிஷ் பாண்டே 30(36) ரன்களும் குவிந்திருந்தனர். டெல்லி அணி தரப்பில் கீமோ பவுள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரத்திவி ஷா அதிரடியாக விளையாடி 38 பந்துகளுக்கு 56 ரன்களை குவித்தது.


மறுபுறம் இவருடன் சேர்ந்து அதிரடி காட்டிய ரிசாப் பன்ட் 21 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்பொழுது ஆடுமுனையில் நின்று கொண்டிருந்த கீமோ பவுல் எல்லைக்கோட்டிற்கு பந்தை விரட்டி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் மே 10-ஆம் நாள் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ள நாக்-அவுட் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment