நீண்ட பயணத்திற்கு தயாராகுங்கள் - சீன அதிபர் அழைப்பு

அமெரிக்கா உடனான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மீண்டும் ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகுங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் சீன மக்களை அந்நாட்டு அதிபர் சி ஜின்பிங்.

ஜியான்க்சி மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

1934 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான மாசேதுங் தலைமையிலான செஞ்சேனை சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட பயணத்தை நடத்தி, சீனாவின் ஆட்சியைக் கைப்பற்றியது.

அதனை குறிப்பிட்டு பேசிய சீன அதிபர், நவீன நீண்ட பயணத்தை தொடங்குவதற்கு தயாராகுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

வர்த்தகப் போர் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மங்கியிருக்கும் நிலையில், ஒப்பந்தம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை சீனா இழந்து விட்டது என்பதற்கான அறிகுறியாகவே ஜின்பிங்கின் பேச்சு கருதப்படுகிறது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment