தேசிய விளையாட்டு விழா ஆரம்பம்

தேசிய விளையாட்டு விழாவுக்கான மூன்று போட்டி அம்சங்கள் அநுராதபுரத்தில் இன்று ஆரம்பமாகின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இந்த 45 ஆவது விழாவில்
ஆண். பெண் இருபாலாருக்குமான சைக்கிளோட்டம், மரதன் ஓட்டப் போட்டி, வேகநடைப் போட்டி என்பனவே இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளன.

இம்முறை இப் போட்டிகள் யாவும் திறந்த போட்டிகளாக நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால்  தனிப்பட்ட வெற்றியாளர்களுக்கே பதக்கங்கள் வழங்கப்படும். அத்துடன் ஒட்டுமொத்த சம்பியன் அணியும் அறிவிக்கப்படமாட்டாது. என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வடக்கு , கிழக்கு மாகாணங்களிலிருந்து போட்டியாளர்கள் மிகக் குறைவாகவே கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

முதலாம் நாளான இன்று ஆண்களுக்கான ரேசிங் சைக்கிளோட்டப் போட்டி  பெண்களுக்கான ரேசிங் சைக்கிளோட்டப் போட்டியும் வலிசிங்க ஹரிஸ்சந்த்ர விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பமாகியது.

நாளை இருபாலாருக்குமான ஸ்டாண்டர்ட் சைக்கிளோட்டப் போட்டி நடைபெறும்.

கடைசி நிகழ்ச்சியான இருபாலாருக்குமான மரதன் ஓட்டப் போட்டி (42.95 கிலோ மீற்றர்) அதிகாலை 5.45 மணிக்கு ஆரம்பமாகும். இப் போட்டிகள் அனைத்திலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வீர, வீராங்கனைகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும். ஒட்டுமொத்த சம்பியன் பட்டம் இம்முறை வழங்கப்படமாட்டாது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment