விபத்தில் வழிந்தோடிய தேனாறு

கொள்கலன் வாகனம் விபத்துக்குள்ளானதில் வீதியில் பெருமளவான தேன் வழிந்தோடிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

இண்டியானா மாநிலத்தின் ஹம்மன்ட் நகரிலுள்ள நெடுஞ்சாலையொன்றில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, சரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வாகனத்தில் ஏற்றப்பட்டிருநத தேன் கொள்கலன்கள் சேதமடைந்து, தேன் வழிந்தோடியது. 

சுமார் 18 ஆயிரத்து, 600 இறாத்தல் தேன் வழிந்தோடியதாக இண்டியானா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டயர்களில் தேன் ஒட்டிக்கொள்வதை தவிர்ப்பதற்காக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கோரினர். சுமார் 8 மணித்தியா லங்களின் பின்னர் அவ்வீதி மீண்டும்  வழமைக்குத் திரும்பியது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment