ஆசிட் வீச்சு எண்மர் மருத்துவமனையில்

குடிபோதையில் இருந்த நபர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் சென்னை நெற்குன்றத்தில் நடந்துள்ளது.

குறித்த பகுதியிலுள்ள  ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் கன்னியப்பன் என்பவர் குடும்பத்தோடு குடியிருந்துள்ளார்.

இவர், வெள்ளிப்பட்டறையில் வேலை பார்க்கிறார். இவரின் மனைவி ரஞ்சனி. ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கர். இவர், பெயின்டராக வேலை பார்க்கிறார்.

வீட்டின் இரண்டாம் மாடியில் அழகுமுத்து, கருப்பசாமி, வாஞ்சிநாதன், பி.வேல்முருகன், வீரமணி, எஸ். வேல்முருகன், அசோக், ப.வேல்முருகன் ஆகியோர் குடியிருந்து வருகின்றனர்.

 நேற்றிரவு இவர்கள் 8 பேரும் வீட்டு மொட்டை மாடியில் மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கு குடிபோதையில் கன்னியப்பனும், பாஸ்கரும் வந்தார்கள்.

இருவரும் அந்த எட்டு பேருடன் வாக்குவாதம் செய்த நிலையில்  அது சண்டையாக மாறியது.

இதைப் பார்த்த ரஞ்சினி கன்னியப்பனையும் பாஸ்கரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். வீட்டின் வெளியில் 8 பேரும் உருட்டுகட்டையுடன் வந்து தகராறு செய்துள்ளனர்.

பின்னர் வீட்டைத் திறந்து கொண்டு வெளியில் வந்த கன்னியப்பன், வெள்ளிப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து 8 பேர் மீதும் வீசிய நிலையில் அவர்கள் வலியால் அலறித் துடித்தனர்.

பின்னர் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கன்னியப்பனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment