ரயிலில் திருடி ஹோட்டல் வாங்கிய கொள்ளைக்காரன்

தொடருந்துகளில், நான்கு ஆண்டுகளாக திருடி வந்த கொள்ளையன் மலேசியாவில் சொந்த ஹோட்டல் வாங்கி நிர்வாகித்து வந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து கேரளா செல்லும் தொடருந்திலேயே குறித்த நபர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். கேரளா மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்ற நபரே இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவம் குறித்து பேசிய ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது,

தொடருந்தில், தொடர்ந்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன் பிடிபட்டுள்ளான். 4 ஆண்டுகளாக ரயில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சாகுல் ஹமீதுவிடமிருந்து 110 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடருந்து முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஹமீது, உடன் பயணிக்கும் பயணிகளுடன் கனிவாகப் பேசி நட்புப் பாராட்டி, இரவில் அவர்கள் உறங்கும் போது அவர்களது உடைமைகள், நகைகளைக் கொள்ளையடிப்பதை தொழிலாகச் செய்து வந்துள்ளான்.

தமிழ்நாடு - கேரளா செல்லும் தொடருந்துகளைக் குறிவைத்து சாகுல் ஹமீது திருடி வந்ததுள்ளான். என்னதான் பலே கொள்ளையனாக இருந்தாலும், ஒரு நாள் அகப்பட்டுத்தானே ஆக வேண்டும். 

அவன் தொடருந்தில் திருடி, 11 வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றதுடன் மலேசியாவில் சொந்தமாக ஒரு ஹோட்டலை வாங்கி நிர்வகித்து வருகிறான்-என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment