பறக்கும் விமானத்தில் சிறுமி துஷ்பிரயோகம்

பறக்கும் விமானத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கோடிஸ்வரர் ஒருவர் சிக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் நடந்துள்ளது.

இதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்டீபன் ப்ராட்லெ மெல் என்ற 53 வயதுடைய ஒருவரே பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

இவர் தனக்குச் சொந்தமான விமானத்தை ”ஆட்டோ பைலட்” மூலம் பறக்க விட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டு கடந்தாண்டு  பதிவானதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் குற்றம் இழைக்கவில்லை என்று மெல் தரப்பில் வாதிடப்பட்டது. 

எனினும் சாட்சியங்கள் குற்றம் நடந்ததை உறுதி செய்யும் வகையில் இருப்பதால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

53 வயதாகும் மெல் மூன்று குழந்தைகளின் தந்தை ஆவார். தனது வழக்கு விசாரணையில், தான் பல அறக்கட்டளைகள் நடத்தி பலரின் முன்னேற்றத்துக்கு உதவுவதாக மெல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment