யாழ்.முஸ்லீம் சமூகத்தினர் யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முள்னெடுத்தனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அவ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் கண்டனம் வெளியிட்டும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் அரசை சட்டத்தின் மூலம் தண்டணையை வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
குண்டு தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் சடடத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு அதிக பட்ஷ தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது, வலியுறுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment