ஆப்பிளின் புதிய அப்டேட்

ஆப்பிள் நிறுவனமாம் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்கு தளத்தின் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்கின்றது.

iOS 12.3.1 எனும் இந்தப் புதிய பதிப்பில் முன்னர் காணப்பட்ட பிரதான குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இவற்றுள் VoLTE (Voice Over LTE) அழைப்பில் காணப்பட்ட குறைபாடுகளும் உள்ளடங்குகிறது. அத்துடன் இன்னும் சில புதிய அம்சங்களும் இப் பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலம் இப் பதிப்பை iPhone XS, iPhone XS Max, iPhone XR, iPhone X, iPhone 8, iPhone 8 Plus, iPhone 7, iPhone 7 Plus, iPhone 6s, iPhone 6s Plus, iPhone 6, iPhone 6 Plus, iPhone SE மற்றும் iPhone 5s ஆகிய கைப்பேசிகளில் நிறுவிக்கொள்ள முடியும்.

இதனை நிறுவிக்கொள்வதற்கு Settings > General > Software Update எனும் படிமுறையை பின்பற்ற வேண்டும்.

இதேவேளை ஆப்பிள் நிறுவனம் விரைவில் iOS 13 எனும் பிரதான இயங்குதளப் பதிப்பனை அறிமுகம் செய்யவுள்ள நிலையிலேயே iOS 12.3.1 பதிப்பினை அறிமுகம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment