போன் செய்ய விமானக் கதவை திறந்த நபர்

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவைப் பயணி ஒருவர் திடீரென உடைக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் சீனாவில்  நடந்துள்ளது.

Fuzhou ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 50 வயதுடைய பயணி ஒருவர் திடீரென விநோதமாக நடந்துகொண்டுள்ளார்.

பின்னர் வேகமாக விமான பணியாளரிடம் சென்று, வீட்டிற்கு போன் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். சிக்னல் இங்கு கிடைக்காது என அவர் கூறியதும், நேராகக் கதவை நோக்கி சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரி ஜாவோ வென்ஹூய் அங்கிருந்து செல்லமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர், எனக்கு உடனே பாரசூட் வேண்டும் எனக் கூறிக்கொண்டே கதவை உடைக்க ஆரம்பித்துள்ளார்.

அதிச்சியடைந்த அதிகாரி, பணியாளரின் உதவியுடன் அவரை அங்கிருந்து இருக்கைக்கு இழுத்துச் சென்றுள்ளார்.

அப்போது அவர் செல்போனை வீசியெறிந்து கண்ணாடியை உடைக்க முயன்றதால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஜாவோ வென்ஹூய் கூறுகையில், விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தான் இந்தச் சம்பவம் நடந்தது. இதில் விமானப் பணியாளர் ஒருவருக்கு இலேசான காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment