மஹத் - பிராச்சி மிஸ்ரா நிச்சயதார்த்தம்அஜித்தின் மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மஹத், தொடர்ந்து ஜில்லா, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில்
போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.


இவர் மிஸ் இந்தியா எர்த் 2002 பிராச்சி மிஸ்ராவை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார் மஹத்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மஹத்தை தான் காதலிப்பதாக நடிகை யாஷிகா தெரிவித்தார். அப்போது யாஷிகாவைத் தானும் காதலிப்பதாக மஹத் கூறினார். 


இதையடுத்து மஹத்தைத் தான் பிரிந்துவிட்டதாக பிராச்சி மிஸ்ரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பின்னர் அந்தப் பதிவை நீக்கி விட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின்னர் இருவருடைய மனக்கசப்பு  நீங்கி  தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தை வீடியோவை இருவரும் வெளியிட்டுள்ளனர்.  மேலும் அந்த பதிவில், “என் வாழ்வின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று, என்னுடைய நிச்சயதார்த்தம் நடந்த
நாள் ” என்று கூறியுள்ளார் மஹத்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment