அமெரிக்கத் திரையரங்குகளில் அங்கு வாழும் இந்திய மக்களுக்காக இந்திய மக்களவைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியத் தேர்தல் முடிவுகள் குறித்து அறிந்துகொள்ள விரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, அமெரிக்காவின் மினியாபோலிஸ், மினசோட்டா போன்ற அமெரிக்கவாழ் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளனர்.
ஐடி நிறுவன ஊழியரும் மோடியின் ஆதரவளாருமான ரமேஷ் நூனே என்பவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்.
1,000 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகளை சுமார் 150 பேர் வாங்கி ஒரு திரையரங்கில் பார்த்துள்ளனர். மேலும், டெக்சாஸ், ஃப்ளோரிடா, வாஷிங்டன், கலிஃபோர்னியா என அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களிலும் பாஜக ஆதரவாளர்கள் சார்பில் தேர்தல் முடிவுகள் குறித்த நேரலை காட்சிப்படுத்தப்பட்டன.
0 comments:
Post a Comment