சூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என்.ஜி.கே’. இப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் சூர்யாவிடம் கேள்வி கேட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்று சுரேஷ் ரெய்னா கேட்க, அதற்கு சூர்யா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் சுரேஷ் ரெய்னா கேள்வி கேட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்று சூர்யா கூறினார்.அதன்பின் ஜோதிகா, கார்த்தியுடன் சேர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, இன்றுதான் ஒரு கதை கேட்டேன். நன்றாக இருக்கிறது. அது அமைந்தால் ஜோதிகாவுடன் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோல் கார்த்தியுடனும் நடிக்க ஆசைதான். அதற்கான நேரம் காலம் அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment