விஜயகாந்த் பாடுபட்டு வளர்த்த கட்சியை பிரேமலதா பாதாளத்தில் தள்ளி விட்டாரா...ஆதங்கத்தில் தொண்டர்கள்..!!!

கூட்டணி பேச்சுவார்த்தையின்போது பாஜக தலைவர்களான முரளிதரராவ் உள்ளிட்டோருடன்  ஹோட்டலின் எல்.கே.சுதீஷ் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்து வந்தார். அதே நேரம் திமுகவுடன் கூட்டணி அமைக்க பிரேமலதா துரைமுருகன் வீட்டுக்கு தனது கட்சியினரான அனகை முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அனுப்பினார். இதை பூதாகரமாக்கி அரசிலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் துரைமுருகன். இந்த விவகாரம் தெரியவர அதிர்ந்து போனது அதிமுக- பாஜக வட்டாரம்.  திமுகவும்  திட்டவட்டமாக கதவை சாத்திவிட, வேறு வழியே இல்லாமல் கூட்டணியில் சேர்த்துக் கொண்டது பாஜக. அப்போது விதைத்த வினையை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார் பிரேமலதா.
தேர்தலுக்கு பிறகான கருத்துக் கணிப்புகளில் பா.ஜ., தான் மறுபடியும் ஆட்சியை பிடிக்கும்'என தகவல்கள் வெளியானது உடனே, டெல்லியில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு, பா.ஜ., தலைவர் அமித்ஷா விருந்து கொடுத்தார். தே.மு.தி.க., தரப்பில் பிரேமலதாவும், சுதீஷும் அழைப்பு வந்தது அவர்களும் கலந்து கொண்டார்கள். அங்கு போன பிறகுதான் தெரிந்தது பிரேமலதாவுக்கு மட்டும் முதல் வரிசையில் இடம் கொடுத்தார்கள். ஆனால், சுதீஷை, மூன்றாவது வரிசையில் உட்கார வைத்து விட்டார்கள்.  பிரதமர் மோடியையும், சில வினாடிகள் மட்டும் தான்,  இவர்களுடன் பேசியிருக்கிறார். மற்ற பா.ஜ., தலைவர்கள், இவர்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால் வெறுப்போடுதான், சென்னைக்கு திரும்பினார்கள்.
தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளிலேயே தேமுதிக மிகக் குறைந்த வாக்குகளை பெற்றது. நான்கு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. அதற்கு பிறகு பாஜகவினர் தேமுதிகவினரை சீண்டவேயில்லை. அதுமட்டும் இல்லாமல் 2.29 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதால் தேமுதிக கட்சிக்கான அங்கீகாரமும் இல்லாமல் போய்விட்டது.  இதனால் சுயேட்சை சின்னத்தில் அடுத்த தேர்தலில் நிற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது தேமுதிக. விஜயகாந்த் பாடுபட்டு வளர்த்த கட்சியை பிரேமலதா பாதாளத்தில் தள்ளி விட்டார் என பொருமித் தள்ளுகிறார்கள் தேமுதிக அடிமட்டத் தொண்டர்கள்.
#Vijayakanth #Premalatha #BJP #Modi #Tamilnewsking
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment