நோயாளியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சில் திடீர் தீ

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி அருகில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வேகமாக சென்றுகொண்டிருந்தது.

அப்போது திடீரென ஆம்புலன்சின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த, ஆம்புலன்ஸ் டிரைவர் உள்ளே இருந்தவர்களை எச்சரித்து அதிலிருந்து வெளியேறினார்.இதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் சிகிச்சைக்காக சென்ற நோயாளி, அவருடன் வந்தவர்கள் மற்றும் 2 நர்ஸ்கள் கீழே இறங்கினர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் ஆம்புலன்சில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் சாலையின் நடுவில் ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment