தேசிய நலனுக்கு எதிரான செயல்களை அரசு நிறுத்த வேண்டும் - சீ.வீ.கே தெரிவிப்பு

தமிழ் துணை இராணுவக் குழுக்களை மீண்டும் அமைப்பது இனக் குரோதங்களையும் பிளவுகளையுமே ஏற்படுத்தும்.  இத்தகைய செயற்பாடுகள் தேசிய நலனுக்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரானது என்பதால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுப்பதை அரசு தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும் வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினர் முன்னாள் போராளிகள் குழுக்கள் சிலவற்றை இணைத்த மீண்டும் ஒரு துணை இராணுவக் குழுவொன்றை உருவாக்குதவற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக  செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கை மேலும் ஒரு இனக் குரோதத்தை உருவாக்ககக் கூடிய செயற்பாடாகவே பார்க்க வேண்டும். கடந்த முப்பது வருட காலத்தில்  நடந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையின் போது முஸ்லீம் உளவாளிகள் தமக்கு பெரிதும் உதவியதாக இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினர் பகிரங்கமாகவே கூறியுள்ளனர். 

அவ்வாறான உளவாளிகளே அந்தப் போர்வையின் கீழ் இப்பொழுது எழுந்துள்ள ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதத்தை உருவாக்கி இந்த மண்ணிலே நிறைவேற்றி வருகின்றனர். இது ஒரு தமிழர் விரோத உணர்வை அவர்களுக்கு ஊட்டிச் செயற்பட்ட விடயமாகப் பார்க்கலாம். 

இப்பொழுது தமிழ்க் குழுக்களை துணை இராணுவ அமைப்பாக உருவாக்குதன் மூலம் முஸ்லீம் தமிழ் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டு இனப்பகை உருவாகுவதற்கே வழிவகுக்கும். 

பாதுகாப்புத் தரப்பினர் தமக்கு வேண்டிய தகவல்களை அல்லது உளவுத் தகவல்களை தமது கட்டமைப்பு மூலமே பெற்றுக் கொள்வது தான் சரியான அனுகுமுறையாகும். 

குறித்த தமிழ்க் குழுக்களைச் சேர்ந்த துணைப்படையை உருவாக்கி செயற்படுத்துவது குரோதங்களையும் இனப்பகையையும் உருவாக்கி தமிழ்ப் பேசும் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தவே செய்யும். முஸ்லீம் உளவாளிகளை தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக பாவித்ததமை பற்றிய மனக்குரோதம் தமிழ் மக்களிடையே இருக்கவே செய்கிறது. 

இவ்வாறான செயற்பாடுகள் தேசிய நலனுக்கோ நல்லிணக்கத்திற்கோ இனத்துவ உறவுகளுக்கோ எதிரானது. ஆகையால் இந்தச் செயற்பாடு தவிர்க்கப்படுதல் வேண்டும் என்பதே எமது கருத்தாகும் - என்றார்.

இலங்கையில் உள்நாட்டு தீவிரவாத கட்டமைப்புக்களை அடக்கும் நோக்கில் தமிழ் துணை இராணுவக் குழுக்களை மீண்டும் அமைப்பது தொடர்பில் பாதுகாப்பு உயர் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment