போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை

போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தி அந்தச் செயற்றிட்டத்தை விரிவுபடுத்த, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றங்களை குறைத்தல் பற்றிய சட்ட வரைவு தொடர்பிலான இந்தக் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவின் தலைமையிலேயே இடம்பெற்றது.
இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் பணிப்புரைக்கமைய ஜூன் 22ஆம் திகதி முதல் ஜூலை 1ஆம் திகதி வரையான காலத்தை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.
இதற்காக, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதுவரி கட்டளைச் சட்டம், விஷ போதைப்பொருள் கட்டளை திருத்தச் சட்டம், சிறைச்சாலைகளின் பாதுகாப்பு, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் நிலவும் போதைப்பொருள் பகுப்பாய்வுடன் தொடர்பான பிரச்சினைகளும் இந்தக் கூட்டத்தின்போது ஆராயப்பட்டன.
இதில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உரிய நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பதிற்கடமை பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment