காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இராணுவ உலங்க வானூர்தி ஒன்ற வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பரிதாபச் சம்பவம் மெக்சிக்கோவில் நடந்துள்ளது.
குறித்த நாட்டில் நிலவும் கடும் வெயில் காரணமாக பைன் மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது.
அண்மையில் ஜல்பான் டி லா சியர்ரா (alpan de la Sierra) பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவியது. தீயைக் கட்டுப்படுத்த
தீயணைப்புத் துறையினர் இராணுவ உலங்கு வானூர்தி மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது, அடர்ந்த வனப்பகுதிக்குள் உலங்கு வானூர்தி நுழைந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
இதில், கடற்படை குழுவைச் சேர்ந்த ஜவர் உட்பட அறுவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment