தமிழர்கள் போல் இல்லை முஸ்லீம்கள் - சொல்கிறார் டக்ளஸ் தேவானந்தா.

நாட்டில் முஸ்லீம் மதத்தின் பெயரால் வன்முறை ஏற்பட்டிருக்கும் போது குறித்த மதத் தலைவர்கள் மற்றும் அந்த சமூகம் எதிர்க்கின்றனரோ இதேபோல  தமிழ் இனத்தின்மீது, மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக தமிழ் சமூகம் அன்றைக்கே குரல் கொடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்திருக்க வேண்டியிருக்காது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்   தெரிவித்ததாவது,

எமது நாட்டில் அண்மையில் முஸ்லீம் மதத்தின் பெயரால் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்படடன.  அந்த சந்தர்ப்பத்தில் விழித்தெழுந்த முஸ்லீம் சமூகம், அதன் மக்கள் பிரதிநிதிகள் வன்முறையில் ஈடுபடடவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். 

இதேபோல தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இனத்தின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக அன்றைக்கே குரல் கொடுத்திருந்தால் தமிழ் சமூகம் முள்ளிவாய்க்கால் வரை சென்று  அழிவைச் சந்தித்திருக்காது.

தமிழ் சமூகம் அழிவடைய, முதுகெலும்பு இல்லாது இருக்க முழுக் காரணம் தமிழ்த் தலைமைகளே. அவர்கள் தங்களின் சுயநலத்துக்கும், வசதிக்கும் உசுப்பேத்து அரசியலை செய்து இனத்தை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

நாட்டில் போர் முடிந்தும், பாதிக்கப்படட மக்களை மீடடெடுக்க மாகாணசபை ஊடாக சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் ஆட்சியை கைப்பற்றிய தமிழ்க் கூட்ட்டமைப்பினர் மக்களுக்கு எதையும் செய்யவில்லை.  என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment