டெங்கு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பமாகிறது

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பமாகிறது.18 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பருவவெயர்ச்சி மழை ஆரம்பமானதை அடுத்து டெங்கு நோய் பரவுவதற்கான சந்தர்ப்பம் கூடுதலாக காணப்படுகிறது.
கடந்த நான்கு மாதங்களில் 16 ஆயிரம் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டார்கள். இவர்களில் 23 பேர் உயிரிழந்ததாக சிறப்பு நிபுணர் ஹசித திசேரா குறிப்பிட்டார்.
இம்முறை முப்படை, பொலிஸார் மற்றும் சிவில் சேவை படையணி நாட்டில் நிலவும் நிலைமையின் காரணமாக இவர்களை இதில் ஈடுபடுத்த முடியாததன் காரணமாக அவர்களுக்கு பதிலாக சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் சர்வோதய மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளனர்.
வாரத்தில் ஒரு முறை சுமார் 30 நிமிட காலம் தமது சுற்றுப் பகுதி தொடர்பில் கண்டறிய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நோய் பரவும் அனர்த்தத்தை பெருமளவு தடுக்க முடியும் என்றும் வைத்தியர் அசித திஸேரா மேலும் தெரிவித்தார்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment