சீக்கியர்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவேன் - மோடி

அரியானா மாநிலத்தில் வரும் மே 12ம் தேதி  ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் அரியானா மாநிலத்தில் பதேபாத் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:

உலகில் ஏதேனும் ஒரு நாட்டினை, பாதுகாப்பு இல்லை என்றால் சக்திவாய்ந்த நாடு என கருத முடியுமா? , மகா கூட்டணியோ அல்லது காங்கிரசோ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தான் பேச முடியுமா? நிச்சயம் முடியாது. அவர்கள் வரலாற்றில் கூட நாட்டின்  பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்க முடியாது.கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக  நடந்த தாக்குதல்களில் சீக்கியர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். இதன் காரணமாக சீக்கியர்களுக்கு கொடுமை இழைத்தவர்களை தண்டிப்பேன் என உங்கள் காவலாளியான நான், அவர்களுக்கு அளித்த சத்தியத்தினை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை எண்ணி ஆறுதல் அடைகிறேன். ஆனால் காங்கிரசோ, இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை பாராட்டி பேசுகிறது. இதிலிருந்தே அவர்களுக்கு மக்களின் உணர்வுகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்பது புரிகிறது.

மக்கள் என் மீதும், பாஜக மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினை நான் உணர்வேன். பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. உங்களுக்காக இந்த காவலாளி என்றும் பணியாற்றுவான் - என்றார் 

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment