வாட்ஸ் ஆப் செயலியில் புது வசதி

இந்தியாவில் தற்போது இடம்பெற்றுவரும் IPL கிரிக்கெட் போட்டிகளை கருத்தில் கொண்டு பேஸ்புக்கினால் கொள்வனவு செய்யப்பட்ட வாட்ஸ் ஆப் செயலியில் புது வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது கிரிக்கெட் தொடர்பான புதிய ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்தல் என்பதாகும்.

இதன்படி பயனர்கள் கிரிக்கெட் தொடர்பான ஸ்டிக்கர்களை நண்பர்களுக்கு பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்

தற்போது இந்த வசதி அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் செயலிக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

 வசதியைப் பெறுவதற்கு முதலில் வாட்ஸ் ஆப் செயலியைத் திறக்க வேண்டும்.

பின்னர் Chat Bar இல் உள்ள ஈமோஜி வசதியை தெரிவு  செய்யுங்கள்.

ஈமோஜி ஸ்கிரீனிலுள்ள ஸ்டிக்கர் வசதியைத் தெரிவு செய்து அதிலுள்ள புதிய ஸ்டிக்கர்களை சேர்ப்பதற்கான '+' குறியீட்டை அழுத்தவும்.

இப்போது Cricket Matchup எனும் சொல்லைப் பயன்படுத்தி தேடுவதன் மூலம் குறித்த கிரிக்கட் ஸ்டிக்கர்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

IPL போட்டிகளைத் தொடர்ந்து உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளும் ஆரம்பமாகவுள்ள நிலையில் இப் புதிய ஸ்டிக்கர்களுக்கு உலக அளவில் பலத்த வரவேற்பு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment