திருமணத்துக்குப் பின்னர் 36 வயதினிலே படத்தில் மீண்டும் திரைக்கு வந்த ஜோதிகா தற்போது பிசியான நடிகையாகிவிட்டார்.
தொடர்ந்து, நாச்சியார் படத்தில் பொலிஸாக நடித்த ஜோதிகா, தற்போது கல்யாண் இயக்கத்தில் நடித்துள்ள படத்திலும் பொலிஸாகவே நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டிருப்பதோடு படத்தின் டைட்டீலும் ஜாக்பாட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் ஜோதிகா மட்டுமின்றி ரேவதியும் பொலிஸ் கெட்டப்பில போஸ் கொடுக்கிறார்கள்.
இந்த ஜாக்பாட் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
0 comments:
Post a Comment