அரச படைகள் பாதுகாப்புகாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சாதாரண மக்களைப் பாதிக்காத வகையில் இடம்பெறவேண்டும். இவ்வாறு வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரவித்தார். அவர் தெரிவித்ததாவது,
கடந்த ஈஸ்டர் தினத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தை சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகள் தங்களது அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்துகின்றார்கள்.
எனவே அரசானது மக்களின் அச்சத்தைப் போக்கி மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.
தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களிடையே ஐக்கியதை ஏற்படுத்தி மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும்-என்றார்.
0 comments:
Post a Comment