எனது நாட்டை விட்டுவிடுங்கள்-மைத்திரி

இலங்கையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடொன்றைச் சேர்ந்த சூத்திரதாரி இருக்கலாம். இவ்வாறு   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்ற செய்தியை ஐஎஸ் அமைப்பிற்குத் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு  வழங்கிய பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

ஐஎஸ் அமைப்பிற்கு என்னிடம் ஒரு செய்தியுள்ளது எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்பதே எனது அந்த செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ் அமைப்பு  சிறிய நாடுகளை இலக்குவைக்கும் தந்திரோபாயத்தை பின்பற்ற ஆரம்பித்திருக்கலாம்.

கடந்த தசாப்தத்தில் இலங்கையிலிருந்து சென்று ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்ற சிறிய குழுவினர் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.

இதேவேளை விசாரணைகளின் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது- என்றார்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment