கொலை செய்ய முயற்சி - பார்த்திபன் மீது உதவி இயக்குனர் புகார்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன். இவரிடம் உதவியாளராக பணிபுரியும் ஜெயம் கொண்டான், தன்னை பார்த்திபன் கொலை செய்ய முயற்சி செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், நான் பாடல் ஆசிரியராக இருக்கிறேன். நடிகர் பார்த்திபன் இயக்குனர் என்ற முறையில் 10 வருடமாக பழகி வருகிறேன். அவருக்கு ஆபிஸ் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை என எல்லா வேலைகளையும் எடுத்துக்கட்டி செய்து வந்தேன். இப்போது எடுத்துக் கொண்டு இருக்கும் ‘ஒத்த செருப்பில்’ தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன்.

பார்த்திபனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டவரிடம் இவரது தோட்ட வேலை காரணமாக ஒரு அட்ரஸ் கேட்டேன். இவருக்காக அட்ரஸ் கேட்ட என்னை நுங்கம்பாக்கம் 4 பிரேம் தியேட்டரில் 3வது மாடியில் வைத்து 8/5/2019 சுமார் 3 மணியளவில் இவரும் இவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் என்னை அடித்து உதைத்து மாடியில் இருந்து தள்ளிவிட பார்த்தனர். நான் அவரிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். 4 பிரேம் தியேட்டரில் 3வது மாடியில் உள்ள சிசிடிவி-யில் இந்த காட்சி பதிவாகியிருக்கும்.என்னைப் போல் எத்தனையோ உதவி இயக்குனர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இவரால் என் உயிர்க்கு ஆபத்து நேரிடும் என்பதால் எனக்கு தக்க பாதுகாப்பு கேட்டு இவ்விண்ணப்பத்தை கோருகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment