க்ளசிக் போட்டியில் பங்குபற்றும் செமென்யா

டயமண்ட் லீக் ப்ரீபொன்டெய்ன் க்ளசிக் போட்டியில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கெஸ்டர் செமென்யா பங்குபற்றவுள்ளார்.

இந்தப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. உடலிலுள்ள ஆண் சுரப்பி நீரான டெஸ்டொஸ்டோரோனின் மட்டத்தை குறைக்கத் தேவையில்லை என்பதால் 3,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற கெஸ்டர் செமென்யா பங்குபற்றத் தீர்மானித்துள்ளார்.

சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனத்தின் புதிய விதிகளின் பிரகாரம் 400 மீற்றருக்கும் 1,500 மீற்றருக்கும் இடைப்பட்ட தூரத்தைக் கொண்ட ஓட்டப் போட்டிகளில் செமென்யா பங்குபற்றுவதாக இருந்தால் அவரது உடலிலுள்ள டெஸ்டோஸ்டெரோன் எனும் ஆண் சுரப்பி நீரின் அளவை குறைக்கவேண்டும்.

ஆனால், புது விதிகளுக்கு கட்டுப்படும் வகையில் டெஸ்டோஸ்டெரோனின் அளவைக் குறைப்பதற்கான மருந்துகளை உட்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள 28 வயதான செமென்யா, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனத்தின் புதிய விதி கடந்த 8 ஆம் திகதி அமுலுக்கு வந்த பின்னர் செமென்யா பங்குபற்றவுள்ள முதலாவது போட்டி இதுவாகும்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment