9 வேடங்களில் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி - பாலிவுட் நடிகை நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கோமாளி. 

படத்தின் படபிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ளது. விரைவில் வெளியாக தயாரக இருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 விதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். 

ஒவ்வொரு கேரக்டர் குறித்த படம் மற்றும் தகவல்களை தினந்தோறும் வெளியிட்டு, படத்துக்கான புரமோஷன் வேலைகளில் படக் குழுவினர் இறங்கி உள்ளனர்.

லட்சுமணன் இயக்கும் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை மகன் கெவினுடன் இணைந்து ஸ்டண்ட் சிவா அமைக்கிறார். இருவரும் இணைந்து ஏற்கனவே அடங்க மறு படத்தில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் 25 ஆவது படம் விரைவில்  ஆரம்பிக்கவிருக்கிறது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment