தேர்தல் குறித்து காயத்ரி ரகுராம்

நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.க  வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்காதது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை காயத்ரி ரகுராம் சமீபத்தில் பா.ஜ.கவிலிருந்து விலகுவதாகவும், தனக்கு அரசியல் இன்னும் கற்றுக்கொள்ள அதிகம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்  வெளியாகி வரும் நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”எங்களுடன் மோடி இருக்கும்போது இன்னும் வலிமையாக இருக்கிறோம். மோடி, இந்தியாவை மீண்டும் பெருமைப்பட வைப்பார்” எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொறு ட்விட்டில், ”கோயம்புத்தூரிலும், கன்னியாகுமரியிலும் பா.ஜ.க தங்களுடைய சிறப்பை கொடுத்தும் இந்த முடிவு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் பெருமையுடன் தான் தோற்கிறோம். தமிழகத்தில் எதிர்பார்த்தபடியே தி.மு.க வெற்றி முகத்தில் இருக்கிறது”


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment