தமிழ்சினிமாவை கடந்த சில வருடங்களாக பேய் பிடித்து ஆட்டியது. ஏகப்பட்ட பேய்ப்படங்கள் வெளியாகி ஒரு கட்டத்தில் எரிச்சலை ஏற்படுத்தின. நயன்தாரா நடித்த டோரா, ஐரா உட்பட கடந்த சில மாதங்களாக பல பேய்ப்படங்கள் தொடர்ந்து தோல்வியைத்தழுவ ஆரம்பித்ததால், தற்போது பேய்ப்படங்கள் தயாரிப்பது குறைந்து வருகிறது.
அடுத்த சீசனாக விளையாட்டு சம்மந்தப்பட்ட படங்கள் அணிவகுக்க ஆரம்பித்துவிட்டன. ரவிஅரசு இயக்கத்தில் அதர்வா நடித்த 'ஈட்டி' படத்தைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'கனா' படமும் வெற்றியடைந்தது.
ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ஹாக்கியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'நட்பே துணை' படம் வௌிவந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படமும் பெண்கள் கால்பந்து சம்மந்தப்பட்ட படம்தான்.
தமிழ்சினிமாவில் சமீபகாலமாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் அதிகமாக வரத்தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் அறிமுக இயக்குனர் பிரித்வி அதித்யா இயக்கத்தில் தடகள விளையாட்டை அடிப்படையாக வைத்து ஒரு படம் உருவாகிறது. இந்த கதையில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment