தற்கொலைக் குண்டுதாரிகள் விவரங்களை வெளியிட்டது பொலிஸ்

இலங்கையில் இடம்பெற்ற  தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தொடர்புபட்டதாகச் சந்தேகிக்கப்படும் குண்டுதாரிகள்  தொடர்பிலான விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

8 இடங்களில் நிகழ்ந்த ஒன்பது குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் புகைப்படங்களையும்,  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

குண்டுதாரிகளுக்கும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்படுவோருக்கும் பெருந்தொகை சொத்துக்கள் இருந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளன. 

இதனையடுத்து, சகல சொத்துக்களையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷங்கிரி-லா ஹோட்டல் தாக்குதலில் மொஹமட் காஸிம் மொஹமட் சஹ்ரான் என்பவர் தொடர்புபட்டுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய மற்றைய நபரின் பெயர் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்.

சினமன்ட் கிரேன்ட் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சூத்திரதாரி மொஹமட் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட் ஆவார். கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர் மொஹமட் அஸாம் மொஹமட் முபாரக்.

இதேவேளை நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சென் செபஸ்ரியன் தேவாலயத்தை அச்சு மொஹமட்  ஹஸ்துன் என்பவர் தாக்கியதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சூத்திரதாரி அலவ்தீன் அஹமட் முவாட், மட்டக்களப்பு ஷியோன் தேவாலய தாக்குதலில் மொஹமது நஸார் மொஹமது அசாத் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார். 

தெஹிவளை ட்ரொப்பிக்கல் இன் விடுதித் தாக்குதலை நடத்தியவர் அப்துல் லத்தீவ் ஜமீல் மொஹமட், தெமட்டகொடை இல்லத்தில் குண்டை வெடிக்கவைத்த பெண்ணின் பெயர் பாத்திமா இல்ஹாம் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தற்கொலைக் குண்டுதாரிகளின் ஏனைய உறவினர்களை இனங்காண்பதற்கு டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment