நாட்டில் நாளை மறுதினம் ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி ஆராதனைகளை நடத்த வேண்டாமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் அறிவித்தல் விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பேராயர் இல்லம் தெரிவிக்கிறது.
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த சம்பவத்தை அடுத்து, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையிலேயே, கடந்த ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி ஆராதனைகள் இரத்துச் செய்யப்பட்டன.
0 comments:
Post a Comment