காதலியைச் சந்திக்க குழிதோண்டிய காதலன்

முன்னாள் காதலியைச் சந்திக்க வீட்டில் சுரங்கம் தோண்டிய 50 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

50 வயதுடைய  கேசர் அர்ணால்டோ கோமஸ் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் பெண் ஒருவருடன் ஒன்றாக வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்துக்காக இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை பூதாகரமாகி நீதிமன்றம் வரை சென்றுள்ளது. 

கோமஸ் அவருடைய  காதலியை அவரது விருப்பம் இல்லாமல் சந்திக்கக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்தது.

இதையடுத்து, ஒருநாள் காதலி வீட்டில் இருக்கும் போது வீட்டின் அடிப்பகுதியிலிருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

முதலில் அதைச் சாதரணமாக எடுத்துக்கொண்ட காதலி, நேரம் ஆக ஆக சத்தம் அதிரித்ததால், சந்தேகமடைந்து சோதனை செய்தார். 

அங்கு தனது முன்னாள் காதலன் வெளியில் இருந்து வீட்டுக்குள் வர குழி தோண்டி அதற்குள் அவரே சிக்கி கொண்டிருந்ததை அவதானித்தார்.

உடனடியாகத் தீயணைப்புப் படை மற்றும் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்க, அங்கு வந்த அவர்கள் கோமஸை மீட்டனர்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி தன்னைப் பார்க்க, கண்காணிக்க முயற்சித்ததாக அவர் மீது காதலி முறைப்பாடு தெரிவித்தார். 

தற்போது அவரை சிறையில் தடுத்து வைக்க நீதிமன்றம். உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் குழியில் சிக்கியதால் முச்சுத்திணறல் ஏற்பட்டு கோமஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை முடிந்ததும் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment