மன்னார், மாந்தை - அடம்பன் பாலப்பகுதியில் காணப்பட்ட மர்மப் பொதி ஒன்றிலிருந்து, கைத்துப்பாக்கி ஒன்றை படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து துப்பாக்கியை மீட்டனர்.
இதன் போது பிளாஸ்ரிக் போத்தலில் கிறீஸ் நிரப்பப்பட்டு அதனுள் கைத்துப்பாக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி ஜப்பான் நாட்டு தயாரிப்பு எனப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை மன்னார் மற்றும் அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து, வருகின்றனர்.
0 comments:
Post a Comment