உலக நாயகன் உளறல் நாயகனாக மாறி விட்டார் - தமிழிசை

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-


திருப்பரங்குன்றத்தில் மக்கள் கொடுக்கும் வரவேற்பை பார்க்கும்போது அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி விட்டது. அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறப் போவதை எண்ணி மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, கமல்ஹாசன் ஆகியோர் பதட்டத்தில் உள்ளனர். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தாலும் இதே கூட்டணியைத்தான் அமைத்திருப்பார்.

சட்டசபையில் ஜெயலலிதாவை அவமதித்த தி.மு.க. தற்போது அவரது மரணம் குறித்து விசாரணை நடத்துவோம் என்று கூறுகிறார்கள். இதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது உளறல் நாயகனாக மாறி வருகிறார். அரசியலில் கமல்ஹாசன் கத்துக்குட்டி. பிரிவினை பற்றி கமல் பிரசாரம் செய்வதாக பா.ஜனதா குற்றம் சாட்டிய நிலையில் அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் இப்படி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பா.ஜனதா உங்களது பேச்சை நிறுத்தும். ஒருநாள் பேச்சிலேயே டார்ச் லைட் பீஸ் ஆகி விட்டது.

ஒழுக்கமான காந்தியின் பேரன் என்று சொல்வதற்கு கமல்ஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை. கமல்ஹாசனின் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

கி.வீரமணி பிரசாரத்துக்கு வந்தால் தி.மு.க.வுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டும் கிடைக்காது. தமிழகத்தில் பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மு.க.ஸ்டாலின் இரட்டை மனதுடன் இருக்கிறார். தேர்தல் முடிந்ததும் அரியணை ஏறலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு நனவாகப் போவதில்லை.

மு.க.ஸ்டாலின் சந்திரசேகரராவை சந்தித்ததால், பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தியாவில் 3 அல்ல எத்தனை அணிகள் வந்தாலும் பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment