சஹ்ரானின் சகாவிடம் விசாரணை ; வெளியானது திடுக்கிடும் தகவல்கள்

இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசீமின் நெருங்கிய சகாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு அமைச்சின் ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததாவது,

சஹ்ரான் ஹாஷிமுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணி வந்த குற்றச்சாட்டில் காத்தான்குடி மெத்தப் பள்ளி வீதியில் வைத்து மொஹம்மட் அலியார் என்ற நபர் கைதுசெய்யப்பட்டார்.

60 வயதான குறித்த நபர் சஹ்ரான் ஹாஷிமுடன் நிதி கொடுக்கல், வாங்கல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகநபரைக் கைது செய்திருந்தனர். இதன் பின் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

பயங்கரவாதிகளால் அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பயிற்சி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயிற்சிகளில் சந்தேகநபரும் பங்கேற்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment