பாதுகாப்பு அமைச்சர் நானானால்.... டக்ளஸ்

பாதுகாப்பு அமைச்சை போர் சூழல் இருந்த காலத்தில் எனக்குத் தந்திருந்தால் அதனைச் சரியாகப் பயன்படுத்தி இருப்பேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்   தெரிவித்ததாவது,

ஆட்சியைக் கைப்பற்றிய தமிழ்க கூட்டமைப்பினர் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மாறாக தங்கள் வாக்கு வங்கிக்காக போலி தேசியம் பேசிக் கொண்டு இராணுவத்தை வெளியேறுமாறு கூறிவந்தனர்.  

மக்கள் நிலங்களை இராணுவம் விடுவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் மாவட்டத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இராணுவம் இருக்க வேண்டும். 

ஏனெனில் நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டாலோ அல்லது இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டாலோ மக்களைக் காப்பாற்ற  இராணுவம் தேவை.  அவ்வாறில்லை என்று கூறுபவர்கள் அதற்குரிய மாற்றுத் திட்டங்களை உருவாக்கி விட்டு இதனை வலியுறுத்த வேண்டும்.

நாட்டில் ஏற்படுகின்ற அசாதாரண சூழ்நிலைகளினால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே. தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால நிலைமை எந்த விதத்திலும் தமிழ் மக்களைத் திட்டமிட்ட வகையில் பாதிக்கக் கூடாது. 

நான் நாடாளுமன்றத்தில் நீண்டகாலம் இருந்தவன், அமைச்சராகப் பணியாற்றியவன். அது மட்டுமல்லாது ஆரம்ப காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அனுபவங்கள் இருக்கின்றது.

தற்போது பாதுகாப்பு அமைச்சை யாருக்கு வழங்குவது என விவாதங்கள் இடம்பெற்று வருகின்றது. எனக்கு இந்த அமைச்சை போர் சூழல் இருந்த காலத்தில் தந்திருந்தால் அதனை சரியாகப் பயன்படுத்தி இருப்பேன்- என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment