வவுனியா மூன்று முறிப்பு பகுதியிலுள்ள பட்டியிலிருந்து பசுமாடு திருட்டுப்போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா மூன்று முறிப்பு பகுதியிலுள்ள வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை கடந்த இரு தினங்களாக எங்கு தேடியும் காணவில்லை. பட்டிக்கும் வராத காரணத்தால் நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் இனந்தெரியாத நபர்களினால் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இருவரை சந்தேகத்தில் இன்று கைது செய்துள்ளதாகவும் குறித்த நபர்களிடமிருந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment