தொழுகையின் போது பள்ளிவாசலில் துப்பாக்கி பிரயோகம்

ரமலான் தொழுகையின் போது பள்ளிவாசலில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெிவிக்கப்படுகிறது.

லண்டனில் உள்ள 7 கிங்ஸ் பள்ளிவாசலிலேயே,  இந்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பள்ளிவாசலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன் போது தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் துப்பாக்கிதாரியை பிடிக்க முயன்றுள்ளனர்.

எனினும், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுறது. எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


#tamilnewsking
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment