துணிச்சலாக பணியாற்றிய ரேடியோ பெண் வர்ணனையாளர்

ஒடிசாவில் கடந்த 3-ந்தேதி கரையை கடந்த பானி புயல் அம்மாநிலத்தை புரட்டிப் போட்டது.


புவனேஸ்வர் மாவட்டத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்திய புயலால் விமான சேவைகளும், பாதிக்கப்பட்டது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிய நிலையில் கோனார்க் பகுதியில் உள்ள ரேடியோ நிலையத்தில் பெண் வர்ணனையாளர் ரோஜலின் பிரேதன் துணிச்சலாக பணியாற்றி புயல் குறித்த செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்.

புயலால் ரேடியோ நிலையத்தின் சுவர்கள் இடிந்து விழுந்த நிலையிலும், அவர் அச்சப்படாமல் வேலை செய்தார். புயல் கரையை கடப்பதற்கு முதல் நாள் ரோஜலின் இரவு நேர பணியில் இருந்தார். மறுநாள் காலை பணி முடிந்ததும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. ஆனால் அந்த ரேடியோ நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் யாரும் அன்று வேலைக்கு வரவில்லை.

காலை 9 மணிக்கு புயல் தாக்கிய வேளையில் தனி ஆளாக பணிபுரிந்த ரோஜலின் பேரிடர் குறித்த தகவல்களை மக்களுக்கு கூறியதாக ரேடியோ நிலைய அதிபர் ஷா அன்சாரி கூறினார்.இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வெளிவந்த புயல் குறித்த தகவல்களை இன்டர்நெட்டில் பார்த்து கிராம மக்களுக்கு காலை 9.30 மணிவரை தெரிவித்துள்ளார். அப்போது வரை அங்கு இன்டர்நெட் சேவை இருந்தது. அதன் பிறகு சிறிது நேரத்தில் புயல் பாதிப்பு அதிகமானதால் இன்டர் நெட் சேவை துண்டிக்கப்பட்டது.

ரோஜலின் கூறிய தகவல்களால் 100 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தப்பித்துள்ளதாகவும் அன்சாரி தெரிவித்தார். புயல் நேரத்திலும் கடமை தவறாமல் துணிச்சலாக பணியாற்றிய ரோஜலினுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment