வற்றாப்பளை அடியவர்களுக்கு ஓர் அறிவித்தல்

முல்லைத்தீவு,வற்றாப்பளை அம்மன் ஆலயப் பொங்கல் விழாவில் தூக்குக் காவடியை ஆலய வளாகத்தில் எடுக்க முடியும் என்று ஆலய பரிபாலன சபைத் தலைவர் அறிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக தூக்குக் காவடிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

மிக நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

வெளியிடங்களிலிருந்து தூக்குக் காவடி வருவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தினுள் தூக்குக் காவடி எடுக்க முடியும். இதற்கான வாகன வசதி ஆலய பரிபாலன சபையால் ஒழுங்கு செய்து தரப்படும்.

024 324 3558 அல்லது 0777 394140 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வாகன வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று பரிபாலனசபைத் தலைவர் அறிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment