வெளியில் காத்திருக்கும் நோயாளிகள் ; வவுனியா மருத்துவமனையில் அவலம்

வவுனியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அதிகாலையில்  பல மணி நேரமாக வெளியில் வீதியோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

விடயம் தொடர்பாக தெரிய வருவதாவது,

வவுனியா பொது மருத்துவமனைக்கு  பல்வேறு பிரதேசங்களிலிருந்து, பொது மக்கள் சிகிச்சைக்காக வருவது, நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் 
நிலையில் அண்மைய அசம்பாவிதங்களுக்கு பின்னர் கடும் சோதனைக்குப் பின்னரே மருத்துவமனைக்குள் செல்ல நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மருத்துவமனையில் நோயாளிகளை பார்வையிடுவதற்கு 6 மணியளவிலேயே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பார்வையாளர்கள் வீதியோரத்தில் 6 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

தொடர் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளையும் உள் செல்ல அனுமதிக்காத நிலை காணப்படுவதுடன் சிகிச்சைக்காக வரும்  நோயாளிகளும் பார்வையாளர்களுடன் வீதியோரத்திலே  காத்திருப்பதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

நோயாளிகள் பல கிலோ மீற்றர் தூரங்களிலிருந்தும் வருவதனால் அவர்களின் நலன் கருதியும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மருத்துவமனைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.  விடயம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கவனமெடுத்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment