கடந்த மே மாதம் 12 ஆம் திகதி குளியாப்பிட்டி நகரிலுள்ள முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் மீது தாக்குதல் நடாத்தி சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 11 சந்தேகநபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று குளியாப்பிட்டி மஜிஸ்ட்ரேட் ஜனனி எஸ். விஜேதுங்க உத்தரவிட்டுள்ளார்.
குளியாப்பிட்டியை அண்டிய கிராமங்கள் பலவற்றைச் சேர்ந்த 11 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பொலிஸாரும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியும் முன்வைத்த சாட்சிகளை கருத்தில் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை, விசாணைக்கு எடுத்துக் கொள்ளும் மேற்குறித்த தினத்தில் பொருத்தமான தீர்ப்பொன்றை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment